Episodios

  • பெர்த் குழந்தையின் மரணம் தொடர்பில் நீதிகோரும் பெற்றோர்
    Jun 20 2024
    மேற்கு ஆஸ்திரேலியாவில் ரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்கள், தங்கள் மகனது மரணம் குறித்த விசாரணைகள் முடியும்வரை மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென சனல் 7க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    3 m
  • யானைகள் பேசுகின்றன! நமக்கு புரிகிறதா?
    Jun 20 2024
    யானைகளும் மனிதர்கள் போன்று சிக்கலான சமூக கட்டமைப்புகளில் வாழ்கின்றன. அப்படியான சமூக பிராணி போன்ற யானைகள் பிற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Sophie Bennett. தமிழில்: றைசெல்.
    Más Menos
    9 m
  • ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறலாம், ஆனால் கடினம்: ஏன்? தீர்வு என்ன?
    Jun 20 2024
    நாட்டில் இயங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்து செயல்படுவதில்லை என்ற விமர்சனம் எழும் பின்னணியில் தாம் வங்கிகள் தொடர்பான சில சீர்த்திருத்தங்களை முன்வைப்பதாக நாட்டின் கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers கடந்த வாரம் அறிவித்தார். இது குறித்த விளக்கத்தை NewGen Consulting Australasia எனும் நிறுவனத்தின் இயக்குனர் எமில் ராஜா அவர்களின் கருத்துக்களோடு முன்வைக்கிறோம்.
    Más Menos
    10 m
  • புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதியை மிக நுணுக்கமாக கடைபிடிக்கின்றனர் - "மல்லிகை" ஜீவா
    Jun 20 2024
    ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா அவர்களின் 97 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் வியாழன் (27 ஜூன் 1927) கொண்டாடப்படுகிறது. தமிழின் மாபெரும் இலக்கிய ஆளுமையான ஜீவா அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு (2006 ஆம் ஆண்டு) வழங்கிய நேர்முகத்தின் முக்கிய ஒலிக்கீற்றுகள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
    Más Menos
    9 m
  • June 23 is International Widows' Day! - ஜூன் 23 சர்வதேச விதவைகள் தினம்!
    Jun 20 2024
    To raise awareness about the challenges faced by women who have lost their husbands and are left without support, the UN General Assembly designated June 23 as International Widows' Day with a resolution passed at the end of 2010. - உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையிலும் ஜூன் 23 ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010 ஆம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    Más Menos
    11 m
  • ஐந்து மாநிலங்களில் ஏழு அணுஉலைகள் - Peter Dutton
    Jun 20 2024
    செய்திகள்: 20 ஜூன் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
    Más Menos
    4 m
  • மகாத்மா காந்தியைக் கொன்றவருக்குச் சிலை வைத்துத் துதி?
    Jun 19 2024
    வலதுசாரி இந்து தேசியவாதிகள் மத்தியில் மகாத்மா காந்தி ஒரு துரோகியாக நோக்கப்படுகிறார். அத்துடன் அவரைக் கொலை செய்த கோட்சேயை சிலை வைத்துப் போற்றுகிறார்கள். SBS Newsஇன் ஆசிய நிருபர் Aaron Fernandes தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
    Más Menos
    7 m
  • Counting and Cracking returns to Sydney - "சிங்கள இலக்கியத்தைவிட ஈழத்தமிழ் இலக்கியம் பல படிகள் முன்னே உள்ளது"
    Jun 19 2024
    "Counting and Cracking," an acclaimed theatre production, is returning to Sydney. The production has won 14 major awards, including Helpmann Awards for best production and best direction, and has recently been showcased at the Birmingham Commonwealth Games and Edinburgh Festivals. Anthony Thasan Jesuthasan, a renowned writer and actor, is part of the cast. He discusses more about the show in an interview with Renuka Thuraisingham. The show will be performed at Carriageworks for a limited season from June 28 to July 21, 2024. - S. ஷக்திதரன் எழுதிய counting and cracking என்ற அரங்க காவியம் சிட்னியில் மீண்டும் மேடையேறுகிறது. எழுத்தாளர் மற்றும் நடிகர் ஷோபாசக்தி இதில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கிறார். இந்நாடகம் தொடர்பிலும் இன்னும் சில விடயங்கள் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    14 m