Episodios

  • நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains
    Apr 29 2025

    அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி. இதை கொண்டாடும் எடப்பாடி & அமித்ஷா டீம்.

    இதில், 'துரைமுருகன்,திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என அடுத்த ஹிட் லிஸ்டில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களை நெருக்குவதன் மூலம், மு.க ஸ்டாலின் அரசை சாய்த்து விடலாம் என்பது அதிமுக - பாஜக கூட்டணி கணக்கு. இந்த நெருக்கடிகளை சமாளிக்,க புது வியூகங்களை நோக்கி நகரும் மு.க ஸ்டாலின். அதை முறியடிக்க 'ரைமிங் ரோஸ்ட்' அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி. இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆடு புலி ஆட்டம், அனல் வீசுகிறது.

    Más Menos
    18 m
  • Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi, Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains
    Apr 28 2025

    'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எதனால் ராஜினாமா செய்தார்கள்? முக்கியமாக முரண்டு பிடித்த பொன்முடி... வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின். ஏன்? இன்னொரு பக்கம், நால்வரை ஸ்டாலின் டிக் அடித்ததற்கு பின்னணியில், சில அரசியல் கணக்குகளும் உள்ளது. இதில் தமது ஸ்மார்ட் மூவ் மூலம் உள்ளே வந்த எஸ்.எஸ் சிவசங்கர்.இதில், இரண்டு அமைச்சர்கள் ராஜினாமாவை, தங்களின் வெற்றியாக கருதி, அதிமுக-பாஜக கூட்டணி, கூடுதல் தலைவலியை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் புது ரூட்டுக்கு மாறும் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், விஜய் கொடுத்த கோவை ஷாக் பதிலடியாக களத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலின். இரண்டு பேருக்குமிடையிலான போரில் ஸ்கோர் செய்தது யார்?

    Más Menos
    24 m
  • Seeman-க்கு தூண்டில் போடும் BJP, Udhayanidhi-க்கு 13 சிக்கல்! | Elangovan Explains
    Apr 26 2025

    அடுத்த சட்டமன்றத் தேர்தல், உதயநிதி ஸ்டாலினுக்குமான ஒரு பரீட்சை என்கிறார்கள் தி.மு.க-வினர். கட்சியை கரை சேர்ப்பது மட்டுமில்லாமல், 'டார்கெட் 200' - ஐ சக்சஸாக்க வேண்டும் ஆனால் கூட்டணி, அமைச்சர்கள், உட்கட்சி பிரச்சனைகள் என '13' - க்கும் மேற்பட்ட சிக்கல்கள், ஷாக் கொடுக்கின்றன. அதை முறியடிக்க புதிய திட்டங்களையும் கையில் எடுத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினிடம், இரண்டு டிமாண்டுகளை முன்வைத்த வைகோ.

    அடுத்து, பா.ஜ.க-வுக்காக சீமானிடம் டீல் பேசிய ஓ.பி.எஸ். அவர்களின் கணக்கு என்ன?

    இதற்கு, என்ன சொன்னார் சீமான்?

    Más Menos
    18 m
  • அப்செட் RN Ravi...ஹேப்பி Stalin...'கூவத்தூரை' கையிலெடுத்த EPS! | Elangovan Explains
    Apr 25 2025

    அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு, திடீரென தடபுடல் விருந்து வைத்துள்ளார் எடப்பாடி. அவர்களுக்கு பெரியளவில் பரிசு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் பெரிய அளவிலான 'இனிப்பு மூட்டைகள்' இதற்குப் பின்னணியில் கூவத்தூர் சென்டிமென்ட் உள்ளது என்கிறார்கள்.

    அடுத்து, மாவட்ட செயலாளர்களுக்கும் புதுப்புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.

    அவர் முன்பு உள்ள சவால்களை சமாளித்து, சக்சஸ் கொடுக்குமா இந்த கூவத்தூர் ஃபார்முலா? இன்னொரு பக்கம், போட்டி மாநாடு நடத்தி, அப்செட்டில் இருக்கும் ஆளுநர் ஆர்.ன் ரவி. 'அவரால்தான் ஆறுதலே' என வேறு கோணத்தில் பார்க்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

    Más Menos
    19 m
  • Stalin-க்காக Senthil balaji ராஜினாமா முடிவு? பரபரக்கும் DMK! | Elangovan Explains
    Apr 24 2025

    'துரைமுருகன், கே.என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி' என நான்கு பேரை டார்கெட் செய்யும் 'எடப்பாடி - நயினார் நாகேந்திரன்' டீம். நால்வருக்கும் இருக்கின்ற வழக்கு சிக்கல், நீதிமன்றம் டபோட்டிருக்கும் செக் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதை கையில் எடுத்து அட்டாக் செய்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க. இதன் மூலம் மு.க ஸ்டாலினுக்கு நெருக்கடி தருவது, அமித்ஷா போட்டுக் கொடுத்திருக்கிற வொர்க் பிளான். இதை சமாளிக்க,எங்கள் மு.க ஸ்டாலினிடம், பக்கா பிளான் உள்ளது என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள்.

    Más Menos
    20 m
  • எதிராக அமைச்சர்கள், அசராத PTR, அட்வைஸ் செய்த Stalin! | Elangovan Explains
    Apr 23 2025

    காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தாக்குதல். உடனே ஸ்பாட்டுக்கு விரைந்த அமித் ஷா. அவர் கொடுத்த உத்தரவாதம்.

    இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு அரசியலில், நீதிமன்றம் தந்த உத்தரவு, அமலாக்கத்துறைக்கு பூஸ்டாக அமைந்துள்ளதால், சிக்கலில் செந்தில் பாலாஜி. அடுத்து, பி.டி.ஆர் ஓபனாக அட்வைஸ் செய்த ஸ்டாலின். பின்னணியில் , பி.டிஆர்-க்கு எதிராக காய்நகர்த்திய சில அமைச்சர்கள். முக்கியமாக, டி.ஆர்.பி ராஜா டீம் வருத்தத்தில் உள்ளதாகவும் தகவல்.

    Más Menos
    21 m
  • '50 தொகுதிகள்' EPS கையில் பட்டியல், வொர்க்அவுட் ஆகுமா புது Work Plan?! | Elangovan Explains
    Apr 22 2025

    அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புதுப் புது திட்டங்களை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி. அந்த வகையில், '50 தொகுதிகளை' பட்டியலிட்டு, முதற்கட்டமாக அந்த தொகுதிகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு, புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் 'டாஸ்மாக் முறைகேடு புகார், 5000 கோடி ஊழல் முறைகேடு' என ஆளும் திமுக அட்டாக் அரசியலையும் தீவிரப்படுத்தியுள்ளார். வொர்க் அவுட் ஆகுமா எடப்பாடி-யின் புது Formula?

    Más Menos
    21 m
  • PTR வேதனை, பின்னணி இதுதான், R.N Ravi-க்கு, Stalin நியூ செக்! | Elangovan Explains
    Apr 21 2025

    'போதிய நிதி ஒதுக்கவில்லை' என வருத்தப்பட்ட பி.டி.ஆர். பின்னணியில் சில ஆதங்கங்கள் உள்ளன. இதை புரிந்து கொண்டு அவருக்கு எதிராக கொம்பு சீவும் சில சீனியர் அமைச்சர்கள். இன்னொரு பக்கம் கூட்டணி குறித்து தொல் திருமாவளவன் பேசியது ஒருவகையில் திமுக கூட்டணிக்குள் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது ஐந்து பின்னணிகளில் இருந்து இவ்வாறு பேசி உள்ளார் என்கிறார்கள் இதை வேறு வகையில் சமாளிக்கும் மு.க ஸ்டாலின். அடுத்து, போட்டி மாநாடு நடத்தும் ஆளுநர் ஆர்.என் ரவி. இதை பாசிட்டிவாக பார்க்கும் முதலமைச்சர். இதன் தொடர்ச்சியாக, 'இணைந்த கைகளுக்கு வலிமை அதிகம்' என்கிறார் மல்லை சத்யா. வைகோ மகன் துரை வைகோ-வுடனான மோதல், முடிவுக்கு வந்தது. இரு தரப்பையும் சமாதானப்படுத்திய வைகோ. பின்னணியில் நடந்த சீக்ரெட் சமரசங்கள்.

    Más Menos
    20 m
adbl_web_global_use_to_activate_webcro768_stickypopup