The Political Pulse | Hello vikatan Podcast Por Hello Vikatan arte de portada

The Political Pulse | Hello vikatan

The Political Pulse | Hello vikatan

De: Hello Vikatan
Escúchala gratis

Acerca de esta escucha

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" PodcastHello Vikatan Ciencia Política Política y Gobierno
Episodios
  • Stalin-க்கு சுற்றி சுற்றி சிக்கல், முறியடிக்குமா புது Agenda? பதறும் மந்திரிகள்! | Elangovan Explains
    Jul 15 2025

    அதிமுக-பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' & 'ஓரணியில் தமிழ்நாடு' என இரண்டையும் கையிலெடுத்த மு.க ஸ்டாலின்.

    'அரசாங்கம்-கட்சி' நேரடியாக மக்களை சந்தித்தால், வாக்குகள் கிடைக்கும் என கணக்கு.

    ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடுமளவுக்கு, உட்கட்சியில் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். இதை சரிசெய்ய களையெடுப்பு அரசியல் கைகொடுக்கும் என நம்புகிறார்.

    அதற்கேற்ப தஞ்சாவூர் மா.செ மற்றும் எம்.பி கல்யாண சுந்தரம் கட்சி பதவியை நீக்கி, அங்கே கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகனை பொறுப்பாளராய் நியமித்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.

    ஏன் கல்யாணசுந்தரம் பதவி பறிபோனது?

    எப்படி அன்பழகனுக்கு யோகம் அடித்தது? இன்னொரு பக்கம், வளமான துறையில் 'தியாகி டீம்' கேட்கும் '6% கமிஷன்'. இதனால் கதறும் மன்றத்தினர்.

    அடுத்து 'பாஜக-வை ரிஜெக்ட் செய்வோம். விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்போம்' என ஓபிஎஸ்-க்கு நெருக்கடி தரும் உட்கட்சி நிர்வாகிகள். அவரோ பாஜக பாசத்தில் இம்மியளவும் குறையாமல் இருக்கிறார்.

    இதனால் ஓபிஎஸ் டீம், உடையும் அபாயத்தில் இருக்கிறது என்கிறார்கள் நிர்வாகிகள் இதை தடுக்குமா அவர்களுடைய செப்டம்பர் மாநாடு?

    Más Menos
    22 m
  • Amit Shah-வை வழிக்கு கொண்டு வருமா EPS-ன் Jagan Mohan ரூட்?! | Elangovan Explains
    Jul 14 2025

    'கூட்டணி ஆட்சி' என மறுபடியும் கொளுத்திப் போட்டுள்ளார் அமித் ஷா. இதை முறியடிக்க, ஆந்திரா ஜெகன் மோகன் Formula-வை கையிலெடுகிறார் எடப்பாடி.

    முக்கியமாக சமுதாய ரீதியிலாகவோ, மண்டல ரீதியிலாகவோ, 6 துணை முதலமைச்சர்களை நியமிக்கும் வாக்குறுதி என புது ரூட் எடுக்கிறார்.

    இன்னொரு பக்கம், திமுக நெருக்கடியை பயன்படுத்தி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக. அந்தவகையில் 'பேக்கேஜ் 50' என்ற அஜெண்டாவை முன் வைத்துள்ளார் திருமா. இதில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தொகுதியும் உண்டு என்கிறார்கள் விசிக-வினர்.

    இதை எப்படி சமாளிக்கப் போகிறார் மு.க ஸ்டாலின்?

    Más Menos
    21 m
  • TRB Raja-வை சுற்றி DMK வார்? Stalin-க்கு சிக்கல் தரும் தொகுதிகள்! | Elangovan Explains
    Jul 12 2025

    ' நூறு தொகுதிகளுக்கு மேல் வீக்காக உள்ளது' என மு.க ஸ்டாலினுக்கு வந்திருக்கும் ஷாக் ரிப்போர்ட்.

    இதை சரி செய்ய ரோடுஷோ உள்ளிட்ட மக்கள் சந்திப்பை தீவிர ப்படுத்துகிறார் ஸ்டாலின் ஆனாலும் பல மாவட்டங்களில் வெடிக்கும் உட்கட்சி மோதல்.

    சமீபத்தில் திருவாரூர் சென்ற போது வெளிப்படையாகவே தெரிந்த டிஆர்பி ராஜா டீம் Vs பூண்டி கலைவாணன் டீம் போஸ்டர் யுத்தம். இந்த சின்ன சின்ன பிரச்சனைகளையும் சரி செய்ய தனி டீம் அமைத்துள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக பலவீனங்களை தமக்கு பலமாக மாற்ற திட்டமிடுகிறார். முக்கியமாக சவுத் தமிழ்நாட்டில், ராஜேந்திர பாலாஜியை சுற்றி பல பிரச்சினைகள் உள்ளது. இதை சாதகமாக்க, கனிமொழியை களத்தில் இறக்கிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

    திமுகவின் தென்னகத்து முகமாக மாறுகிறாரா கனிமொழி?

    இன்னொரு பக்கம் இதை சரி செய்ய 80 லட்சம் புதிய வாக்காளர்களை டார்கெட் செய்து சில அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது கட்சியினருக்கு.

    வொர்க் அவுட் ஆகுமா ஸ்டாலின் வகுத்துருக்கும் வெற்றிக்கான வியூகங்கள்?

    Más Menos
    13 m
Todavía no hay opiniones