Episodios

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (22 – 28 மார்ச் 2026)
    Mar 28 2026
    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (22 – 28 மார்ச் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
    Más Menos
    6 m
  • How public and community housing works in Australia - Social housing: குறைந்த செலவில் உங்களுக்கான வீடொன்றைப் பெறுவது எப்படி?
    Mar 27 2026
    In Australia, government-subsidised rental housing is available for eligible households. Assessment is based on need under criteria that vary depending on your state or territory. Here’s what to expect when applying for different types of housing assistance, some common myths around social housing and where to reach out for help. - ஆஸ்திரேலியாவில் நீண்டகால அடிப்படையில் வாடகை வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் உதவி எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றியும் social housingக்காக விண்ணப்பிக்க நினைப்பவர்கள் எங்கு உதவி பெறலாம் என்பதைப் பற்றியும் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    10 m
  • உலக மேடையில் இந்திய குரல்: FIFA உதவி நடுவர் டோனி ஜோசப் லூயிஸ்
    Mar 27 2026
    டோனி ஜோசப் லூயிஸ் அவர்கள், 2016 முதல் சர்வதேச அளவில் திறமையான FIFA உதவி நடுவராக பணியாற்றிவருகிறார். துல்லியமான முடிவுகள் மற்றும் நிலையான செயல்திறன் மூலம் பல சர்வதேச போட்டிகளில் பணியாற்றி, உலக கால்பந்து சமுதாயத்தில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது பயணம், அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு மற்றும் விளையாட்டின் மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம் போன்ற பல விடயங்களை அவர் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
    Más Menos
    17 m
  • தமிழ்த் தடம்: ஒளவையார்கள்
    Mar 27 2026
    தமிழ் இலக்கிய மரபில் ஔவையார்களின் பங்களிப்புகள் குறித்த தகவலை முன்வைக்கிறார் தனபாலசிங்கம் அவர்கள்.
    Más Menos
    6 m
  • செய்தியின் பின்னணி: E10, E15, E20 போன்ற எதனோல் எரிபொருள்: மலிவான மாற்றுத் தீர்வா?
    Mar 27 2026
    ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை பொதுமக்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்கான மாற்றுத் தீர்வாக எதனோல் கலந்த பெட்ரோல் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது உண்மையில் பெட்ரோல் விலையைக் குறைக்குமா என்பதே தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
    Más Menos
    6 m
  • இன்றைய செய்திகள்: 27 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை
    Mar 26 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/03/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
    Más Menos
    4 m
  • ஆஸ்திரேலியா அறிவோம்: Tasmania, பெருந்தீவில் ஒரு குட்டித் தீவு!
    Mar 26 2026
    ஆஸ்திரேலியாவின் ஒரே தீவு மாநிலம் டாஸ்மேனியா. இலங்கையை விடவும் சற்றே பெரிய தீவான டாஸ்மேனியா சுமார் 64,000 சதுர கி.மீ. பரப்பளவுடன் உலகின் 26-வது பெரிய தீவாக உள்ளது. இந்த தீவின் வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
    Más Menos
    9 m
  • விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய இளைஞர் மரணம்
    Mar 26 2026
    விக்டோரியாவின் Bendigo அருகில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பின்னணி கொண்ட இளைஞர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Más Menos
    2 m