Episodios

  • Thirukkural - கல்லாமை 2
    Oct 15 2025

    கல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.

    இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது. ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - கல்லாமை 1
    Oct 1 2025

    இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 41வது அதிகாரமான கல்லாமை. இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் கல்வியின் சிறப்பைப் பற்றிப் பார்த்தோம். ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது. இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது.

    Más Menos
    7 m
  • Thirukkural - கல்வி -2
    Sep 17 2025

    இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

    சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - கல்வி -1
    Sep 3 2025

    இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.

    சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

    Más Menos
    8 m
  • Thirukkural - இறைமாட்சி - 2
    Aug 20 2025

    இந்த பகுதியில் இறைமாட்சி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பார்ப்போம்.

    இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவற்றைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடைமை, திறமைகள் பற்றிச் சொல்கிறது.

    Más Menos
    9 m
  • Thirukkural - இறைமாட்சி - 1
    Aug 6 2025

    இதுவரை திருக்குறளின் அறத்துப்பாலில் இருத்து 38 அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியிலிருந்து பொருட்பால் ஆரம்பமாகிறது. திருக்குறளின் 39வது அதிகாரம் இறைமாட்சி.

    இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவர்களைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடமைகள், திறமைகள் பற்றிச் சொல்கிறது.

    Más Menos
    9 m
  • Thirukkural - ஊழியல் - 2
    Jul 23 2025

    திருக்குறளின் ஊழியல் அதிகாரத்திருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து அவரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்குக் காரணம் ஊழ்வினைதான். தெய்வம் வகுத்த வழியில் நடக்கும் செயல்கள் அவை.

    Más Menos
    9 m
  • Career Counseling - Interview with Ramalakshmi Das
    Jul 17 2025

    In today's episode, Ramalakshmi Das discusses the clash between parents and students' choices during career counseling and the importance of recognizing the child's aspirations.

    Más Menos
    34 m