Ramana Maharshi Guidance (Tamil) Podcast Por Vasundhara ~ வசுந்தரா arte de portada

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

De: Vasundhara ~ வசுந்தரா
Escúchala gratis

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா Espiritualidad
Episodios
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி?
    Mar 4 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : தியானம் செய்யும்போது சில சமயங்களில் எளிதாக இருக்கிறது, சில சமயம் முடியவேஇல்லை, இதை சமாளிப்பது எப்படி? இதயம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு ஜீவனுக்கு என்ன ஆகிறது? தியானம் என்றால் என்ன, செய்வது எப்படி? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    4 m
  • ரமண மகரிஷியின் அறிவுரைகள் | தெய்வீக சித்தத்தின் சக்தியை உணர்ந்துக் கொண்டு அமைதியாக இருங்கள்
    Feb 12 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ஒரு பக்தருக்கு பின்வரும் சந்தேகம் எழுகிறது : "ஒருவர் தமது தவறான அகங்கார "நான்" எண்ணத்தை விட்டு விட்டுமெய்யான நிரந்தர பூரண சொரூப நிலையை உணர்ந்துக் கொண்டு விட்டால், பின் மற்றவர்களுக்காக எப்படி பிரார்த்திப்பது?" பகவான் ரமண மகரிஷி இதற்கு மிகவும்தெளிவாக விளக்கம் அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    12 m
  • ரமண மகரிஷி | இளமையில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா?
    Jan 29 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. இளமையில் பணம் சம்பாதிப்பதிலும் உடல் சார்ந்த இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தும்இளவயதினரால், ஆன்மீகத்தில் ஈடுபட்டு உண்மையான சந்தோஷத்தையும் மன அமைதியையும் நாடி மனதுள் விசாரித்து தேடி அறிவது நடைமுறையில் சாத்தியமா? மகரிஷியின் அறிவுரைகளுடன் விளக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Más Menos
    15 m
Todavía no hay opiniones