மனப்பூர்வமான காதலில் POCSO சட்டத்தைப் பயன்படுத்தலாமா? உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரி கேள்விகள்!
No se pudo agregar al carrito
Add to Cart failed.
Error al Agregar a Lista de Deseos.
Error al eliminar de la lista de deseos.
Error al añadir a tu biblioteca
Error al seguir el podcast
Error al dejar de seguir el podcast
-
Narrado por:
-
De:
நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு வழங்கப்பட்ட 20 ஆண்டு காலக் கடுமையான சிறை தண்டனையை ரத்து செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018-ல் நடந்த இந்தச் சம்பவத்தில், 16 வயது சிறுமி தனது விருப்பத்துடனேயே காதலனுடன் சென்றதும், பெற்றோரின் வற்புறுத்தலால் பின்னர் அவர் மீது போக்ஸோ (POCSO) வழக்கு பாய்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதின்பருவத்தினர் (Adolescents) தங்களுக்குள் விரும்பி ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளில், பெற்றோரின் எதிர்ப்பால் இளைஞர்கள் எப்படிச் சட்ட ரீதியாகப் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதை நீதியரசர் என். மாலா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 'ரோமியோ-ஜூலியட்' விலக்கு (Romeo-Juliet Clause) பற்றியும், ஒருவரின் வயதுச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் நடந்த குளறுபடிகள் குறித்தும் இந்தத் தீர்ப்பு விரிவாகப் பேசுகிறது. காதலுக்கும் சட்டத்திற்கும் இடையிலான இந்தச் சிக்கலான போராட்டத்தையும், நீதிமன்றத்தின் முற்போக்கான கருத்துக்களையும் இந்த வீடியோவில் ஆழமாக அலசுகிறோம்.
இது போன்ற உங்கள் வாழ்வில் நடந்த அல்லது நீங்கள் கேள்விப்பட்ட உண்மைச் சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால் theopenmicpodcasts@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கதைகளை எழுதி அனுப்புங்கள்